Wednesday, January 07, 2015
இலங்கை::ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையார் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று இரவு ஒளிபரப்பான “ ரட ஹ ஹெட” என்ற நிகழ்ச்சியில் பங்குகொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
நாளைய தினம் வாக்களிப்புகள் முழு அளவில் நீதியானதாக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்கு பெட்டிகள் கொண்டுச் சொல்லும் போது மாற்றப்படும் என்று தெரிவிக்கப்படும் கருத்தை முற்றாக மறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டரீதியானதாகவே இடம்பெறும் என்பதை மீண்டும் தாம் உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் நாளை மாலை 4.30 மணி தொடக்கம் அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிப்பிட்டார்.

No comments:
Post a Comment