Friday, January 23, 2015

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிராகரிப்பு!

Friday, January 23, 2015
இலங்கை::
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிராகரித்துள்ளார். மேலும் தனது கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதையும் அவர் உறுதி செய்துள்ளார். தான் இலங்கையில் இருப்பதை உறுதி செய்யவே கடவுச்சீட்டு முடக்கப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றை விடுத்து குறிப்பிட்டுள்ளார்.

8 ½ ஆண்டுகள் நேர்மை, விடாமுயற்சி அடிப்படையில் மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றியதாக கப்ரால் கூறியுள்ளார். ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகள் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் இழிவுபடுத்தல்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் பதவி விலகிய பின் உத்தியோகபூர்வ இல்லத்தை கையளித்து கொழும்பில் தனியார் இல்லத்திற்கு சென்றுள்ளதாகவும் நாட்டைவிட்டு செல்லும் நோக்கம் இல்லை என்றும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment