Tuesday, January 6, 2015

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு!

Tuesday, January 06, 2015
ராமேஸ்வரம்::காரைக்காலில் இருந்து கடந்த டிச.7ல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 15 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை சிறையில் இருந்தவர்கள் அனைவரும் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பி விட்டனர்.
 
ஆனால், பெயர் குழப்பத்தால் காரைக்கால் மீனவர்கள் 15 பேர் மட்டும் விடுவிக்கப்படவில்லை. இவர்களை நேற்று காலை இலங்கை பருத்தித்துறை கோர்ட்டில் அந்நாட்டு போலீசார் ஆஜர்படுத்தினர். மீனவர்களி டம் விசாரணை செய்த நீதிபதி, அவர்களின் சிறைக்காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து, ஜன. 19ல் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
 
மீனவர்கள் அனை வரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிபர் பதவி தேர்தல் பணியில் மும்முரமாக இருக்கும் இலங்கை அரசு தரப்பிலிருந்து, 15 மீனவர்களின் விடுதலை குறித்து எவ்வித உத்தரவும் வரவில்லை. இதனால் மீனவர்களின் விடுதலை தள்ளிப்போகிறது. தேர்தலுக்கு பின் காரைக்கால் மீனவர்கள் விடுதலையாகும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment