Tuesday, January 6, 2015

யாழில் ஜனாதிபதி மஹிந்த ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு!:யாழில் த.தே.கூட்டமைப்பிலிருந்து விலகி ஜ.ம. சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்தவர்களின் வீட்டின் மீது தாக்குதல்!

Tuesday, January 06, 2015
இலங்கை::யாழ். கோப்பாய்  பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் மீது நேற்று இரவு வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

இதற்க்கு இலக்காகிய ஒருவர் வலது கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
யாழில் த.தே.கூட்டமைப்பிலிருந்து விலகி ஜ.ம. சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்தவர்களின் வீட்டின் மீது தாக்குதல்!
 
த.தே.கூட்டமைப்பிலிருந்து விலகி ஜ.ம. சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்த கணவன் மனைவியான உள்ளுராட்சி மன்ற உறுப்பினா்களின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
 
 

No comments:

Post a Comment