Tuesday, December 2, 2014

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நேற்று கட்டுப்பணம் செலுத்தினார்!

UPFA makes deposits for Presidential poll 2
UPFA makes deposits for Presidential poll 3
UPFA makes deposits for Presidential poll 4
UPFA makes deposits for Presidential poll 5
Tuesday, December 02, 2014
இலங்கை::ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவினால் இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் நேற்று நவம்பர் 01ஆம் திகதி கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
 
கூட்டமைப்பின் வேடபாளர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் அங்கு கருத்துத் தெரிவித்த ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாபா,
 
கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிகப்படியான வாக்குகளால் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான சகல தேர்தல் வியூகங்ளும் அமைக்கப்பட்டுள்ளன. 
 
இங்கு கருத்துத்தெரிவித்த அமைச்சர் தினேஷ்குனவர்தன,
 
கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ்வின் வெற்றிக்காக தமது கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இதுவரையில் 14 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்னும் சில தினங்களில் மேலும் சில அரசியல் கட்சிகளும் குழுக்களும் இதில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment