Tuesday, December 2, 2014

கனடாவில் தொடர்மாடிக்கட்டிடம் ஒன்றில் மூவரின் உடல்கள்?. கொலை என சந்தேகம்!

Tuesday, December 02, 2014
கனடா East York-ல் உள்ள தொடர்மாடிக்கட்டிடம் ஒன்றில் இறந்து கிடந்த நிலையில் மூவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ரொறொன்ரோ பொலிசார் இதனை கொலைகள் என கருதுகின்றனர்.
டொன்மில்ஸ் வீதிக்கும் டொன்வலி பார்க்வேயிற்கும் அருகில் தோன்கிளிவ் பார்க் டிரைவ்வில் அமைந்துள்ள தொடர்மாடிக்கட்டிடத்தில் இந்த உடல்கள் சனிக்கிழமை 4.45-மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நெருங்கிய இரத்த உறவினர்கள் இறந்தவர்களை அடையாளம் காட்டும் வரை இவர்களின் வயது, பெயர்கள், இனம் போன்ற விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை.
இச்சம்பவத்திற்கு முன்னதாக நகரில் நடந்த வேறு ஒரு சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என இந்த பல கொலை விசாரனையில் ஈடுபடுத்தப் பட்டுள்ள ஆட்கொலை தடுப்பு பிரிவினர் சந்தேகிப்பதாகவும்  ஆனால் சரியான தொடர்பு தெரியாத காரணத்தால் விசாரனை இடம்பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட மற்றய நிகழ்வானது – சனிக்கிழமை பிற்பகல் 1.10-மணியளவில் டொன்வலி பார்க்வேயில் உள்ள லீசைட் பிறிட்ஜ்ஜில் இருந்து ஒரு மனிதன் கீழே விழுந்துள்ளதாகவும் விழுந்து போது கார் ஒன்றின் மீது விழுந்ததால் காயப்பட்டு அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.
இவரின் வீட்டிற்கு பொலிசார் சென்றபோது அங்கே தான் இறந்து கிடந்த மூவரின் உடல்களும் கண்டுபிடிக்கப் பட்டதாக ஒரு ரகசிய பொலிஸ் வட்டாரம் தெரிவித்திருப்பதாகவும் அறியப்படுகின்றது.
இக்கொடூரமான குற்றச்செயலை செய்த சந்தேக நபர் இன்னமும் பிடிபடவில்லை.

No comments:

Post a Comment