Tuesday, December 2, 2014

திவிநெகும பிரிவின் ஏற்பாட்டில்: கல்முனையில் ஹரீஸ் எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவிகள்!

Tuesday, December 02, 2014
இலங்கை::கல்முனை பிரதேச செயலக திவிநெகும பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்ட திவிநெகும குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு  நேற்று (01) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
 
கல்முனை பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமுhன சட்டத்தரணி எச்.எம்.மஎ;.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.
 
32 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா நிதியில் கொள்வனவு செய்யபப்ட்ட தையல் இயந்திரங்கள் கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை, மருதமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள 118 திவிநெகும குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
 
இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி உள்ளிட்ட கல்முனை பிரதேச செயலக திவிநெகும உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment