Tuesday, December 30, 2014
இலங்கை::ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ மறுத்துவிட்ட முஸ்லிம்களுக்கென்று தனியான கரையோர
மாவட்ட நிர்வாக அலகினைப் பெற்றுக்கொள்வதற்கே ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசிலிருந்து விலகி மைத்திரிபால
சிறிசேனவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு எதிரணி யில்
இணைந்துள்ளார்.
அந்த உடன்படிக்கை உடனடியாக பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்
வேண்டுகோள் விடுத்தார்.
கொழும்பு கிருலப்பனை பெளத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
இந்நாட்டை இன ரீதியில் துண்டாட
ஹக்கீமுக்கு ஒரு போதும் நாம் இடமளிக்க மாட்டோம். எமது உயிர்களை
தியாகம் செய்தாவது இதைத்தடுக்க நாம் தயாராகவே உள்ளோம். ஹக்கீம்
கல்முனை சம்மாந்துறை பொத்துவில் பிரதேசங்களை இணைத்து
முஸ்லிம்களுக்கென்று தனியான நிர்வாக அலகொன்றினை ஜனாதிபதியிடம்
கோரியிருந்தார். அவ்வாறு நாட்டைப் பிரிக்க முடியாது என்று ஜனாதிபதி
மறுத்துவிட்டார். ஜனாதிபதி வழங்க மறுத்ததைப் பெற்றுக்
கொள்வதற்காகவே மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் சேர்ந்துள்ளார்.
கல்முனையில் நடந்த கூட்டத்தில் ஹக்கீம் இதனைப் பகிரங்கமாகவே
கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கு இணைப்பு
13ஆவது திருத்தச்சட்டத்தை பொதுபலசேனா எதிர்க்கிறது.
இந்நாட்டில் உள்ளூராட்சி முறை இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன வடக்கு கிழக்கை இணைப்பதற்கு
உறுதியளித்துள்ளார். இவ்வாறு வடக்கு கிழக்கு இணைக்கப்படுவது
மிகவும் ஆபத்தானதாகும். இது பிரிவினைக்கே வழிவகுக்கும். இதனால்
இந்தியாவின் அரசியலும் பாதிப்புகளுக்குள்ளாகும்.
மேற்கத்தேய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப மைத்திரிபால சிறிசேன குழுவினர் செயற்பட்டு வருகின்றனர். மேற்கத்தேய நாடுகள் தமது நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளன. நாட்டின் ஒருமைப்பாடு பற்றி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டில்லை. நாட்டைத் துண்டாடுவதற்கு பல தூதுவராலயங்களூடாக மில்லியன் கணக்கான டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச சூழ்ச்சி
சர்வதேச சூழ்ச்சிக்கு அமைவாக இலங்கையில் லிபியா ஈராக் சிரியா
எகிப்து மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் போன்ற நிலைமையை
உருவாக்குவதற்கே ஹக்கீம் அரசிலிருந்து விலகி எதிரணியில்
இணைந்துள்ளார். அவர் இவ்வாறு செயற்படுவார் என்று பொதுபலசேனா 2
வருடங்களுக்கு முன்பே எதிர்வு கூறியிருந்தது.
2002ஆம் ஆண்டு அரசியலில் பெரிய மாற்றமொன்று ஏற்பட்டது. ரணில்
விக்கிரமசிங்க பதவிக்கு வந்தார். அக்காலத்தில்
புலிகளுடன் சமாதான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.
புலிகளுக்கு தனியான அலகொன்றினை வழங்குவதே அதன் நோக்கமாகும். இந்த உடன்படிக்கையின் பின்னணியிலும் சர்வதேச சூழ்ச்சியே இருந்தது. இன்றும் அதே போன்றதொரு சூழ்ச்சியே இடம்பெறுகிறது. 2002ஆம் ஆண்டு புலிகளுக்கு ஒரு தனி அலகு வழங்கியது போன்று
தமிழர்களுக்கு தனியான பிரிவொன்றும் முஸ்லிம்களுக்கு தனியான அலகொன்றும் வழங்குவதே சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலாகும். மேற்கத்தேய சக்திகளுக்கு இந்த நிகழ்ச்சி நிரல் தேவைப்படுகிறது. 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூழ்ச்சியின் இரண்டாம் கட்டமே இது.
புலிகளுக்கு தனியான அலகொன்றினை வழங்குவதே அதன் நோக்கமாகும். இந்த உடன்படிக்கையின் பின்னணியிலும் சர்வதேச சூழ்ச்சியே இருந்தது. இன்றும் அதே போன்றதொரு சூழ்ச்சியே இடம்பெறுகிறது. 2002ஆம் ஆண்டு புலிகளுக்கு ஒரு தனி அலகு வழங்கியது போன்று
தமிழர்களுக்கு தனியான பிரிவொன்றும் முஸ்லிம்களுக்கு தனியான அலகொன்றும் வழங்குவதே சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலாகும். மேற்கத்தேய சக்திகளுக்கு இந்த நிகழ்ச்சி நிரல் தேவைப்படுகிறது. 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூழ்ச்சியின் இரண்டாம் கட்டமே இது.
இரகசிய ஒப்பந்தங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் தமிழ் தேசிய
கூட்டமைப்புடனும் மைத்திரிபால சிறிசேனா தரப்பினர் செய்து
கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தங்கள் நாட்டு மக்களுக்கு
வெளிப்படுத்தப்பட வேண்டும் இந்த இரகசிய ஒப்பந்தங்கள் நாட்டின்
ஒருமைப்பாட்டுக்கும் இன ஐக்கியத்திற்கும் பாதுகாப்புக்கும்
ஆபத்தானதாகும்.
தலைவர் இல்லாத நாடு
சர்வதேச சக்திகள் மேற்கத்தேய நாடுகள் இலங்கையில் தலைவர் இல்லாத
ஒரு ஆட்சியை உருவாக்கவே முயற்சிக்கின்றன. தலைவர் இல்லாத நாட்டை
சர்வதேச சக்திகளுக்கு கொள்ளையடிக்க முடிகிறது. எகிப்து சிரிய
ஈராக் போன்ற நாடுகளில் இந்நிலைமையை காண முடிகிறது. இது மேற்கத்தேய
நாடுகளின் செயலாகும்.
நாட்டைப் பாதுகாக்க வேண்டும்
அதிகமான தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரு அணியினை
ஆரம்பித்திருப்பதால் அவர்களால் நாடு நாசமாக்கப்பட்டு விடும்.
சிங்கள பெளத்தர்கள் இந்நிலைமையை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். மஹிந்த
ராஜபக்ஷ சர்வதேச சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க முன்வந்துள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரும் விசேடமாக சிங்கள பெளத்தர்கள் நாட்டைப் பாதுகாக்க
முன்வந்துள்ள மஹிந்தவை ஆதரித்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.
ஹக்கீமும் தூய நாளை அமைப்பும் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையும்
என்னவென்று பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றார். நிகழ்வில்
பொதுபலசேனாவின் நிர்வாக பணிப்பாளர் டிலன்ந்த விதானகேயும் உரையாற்றினார்.
No comments:
Post a Comment