Monday, December 29, 2014

குறுகிய பழிவாங்கும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தாய் நாட்டைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாது மைத்திரி பால: வெளிநாட்டுச் சக்திகளுடன் உள்நாட்டுத் தலைவர்கள் சிலரும் இணைந்துள்ளனர்: ஜீ. எல். பீரிஸ்!

Monday, December 29, 2014
இலங்கை::ஆட்சி மாற்றம் ஜனாதிபதி மஹிந்தவை மாற்றல் இவை இரண்டையும் மட்டுமே தமது கருப்பொருளாகக் கொண்டு பிரசாரம் செய்து வரும் எதிரணியினர் ஒரு நாட்டை நிர்வகிப்பது தொடர்பான எவ்விதமான அடிப்படைக் கொள்கை அறிவுகூட இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பதை இவர்கள் ஏதோ விளையாட்டுத் தனமாக நினைக்கிறார்கள். சந்திரிகாவும். ரணில் விக்கிரமசிங்கவும் சரத் பொன்சேகாவும் தமது குறுகிய பழிவாங்கும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தாய் நாட்டைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாது மைத்திரி பால சிறிசேனவைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தான் ஜனாதிபதி ஆகிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்பதாகவே மைத்திரிபால நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை மேடைகளில் தெரிவித்து வருகிறார். தன்னைச் சந்திக்கும் தலைவர்களுடன் ஒவ்வொரு மாதிரி முன்னுக்குப் பின் சம்பந்தமில்லாது கதைக்கிறார்.

இத்தகைய ஒருவரால் ஒரு நாட்டை எப்படி நிர்வகிக்க முடியும்?
இது விளையாட்டல்ல. நாட்டை நிர்வகிக்க முதலாவதாக சரியான முறையில் வெளிநாட்டுக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும். அயல் நாடுகளைச் சமாளிக்க வேண்டும். தெற்காசியாவிலேயே அமைதியான நாடாக இலங்கை மட்டுமே உள்ளது. அதற்கு கடந்த பத்து வருடங்களாக நட்டை ஆட்சி செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம். அதனைச் சீர்குலைக்க முயற்சி செய்தவரும் வெளிநாட்டுச் சக்திகளுடன் உள்நாட்டுத் தலைவர்கள் சிலரும் இணைந்துள்ளனர். இது தேசத் துரோகச் செயற்பாடாகும்.

எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு நாட்டை தலைமை தாங்கி ஆளும் வல்லமை கிடையாது. இவருக்கு எத்தகைய முன் அறிவும் இல்லை. அத்துடன் இவருடன் கூட்டணி அமைத்துள்ளவர்கள் தமக்கிடையே பல முரண்பாடான கருத்துக்களைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். உள்நாட்டிலேயே ஆட்சி செய்ய முடியாதவராகக் காணப்படும் இவரால் வெளிநாட்டுக் கொள்கைகளை முன்னெடுக்க முடியாது. இது எதிர்காலத்தில் எமது நாட்டுக்கு பாரதூரமான விளைவை எற்படுத்தலாம். மைத்திரியுடன் இணைந்துள்ள சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா. மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாச. கரு ஜெயசூரிய, ஜாதிக ஹெல உருமய உட்பட பல கருத்துக்களையும் கொண்டவர்களை இவரால் சமாளிக்க முடியாது.

இப்போது தேர்தலை இலக்காக வைத்து இவர்கள் தமக்கிடையே போலியான ஒற்றுமையை காட்டி வருகிறார்கள். ஒருவேளை இவர்கள் ஆட்சியை அமைத்தால் அதன் பின்னர் இவர்களது சுயரூபங்கள் தெரிய வரும். உண்மையில் கீரிகளும் பாம்புகளும் ஒற்றுகூடி தமக்கிடையே பேலியான ஒற்றுமையை வெளிக்காட்டி வருவதாகவே என்னால் பார்க்க முடிகிறது. இவர்களால் ஒற்றுமையாக இருந்து நாட்டை ஒருபோதும் நிர்வகிக்க முடியாது. மைத்திரியால் தன்னிச்சையாக ஒரு முடிவினையும் எடுக்க முடியாது. சந்திரிகா, ரணில், சரத் பொன்சேகா, ஜாதிக ஹெல உருமய கட்சியினர் ஆயோரிடம் இவர் ஆலோசனை பெற்றே ஆக வேண்டும். நாட்டை நிர்வகிக்க ஜனாதிபதி மஹிந்த போன்ற பலமுள்ள ஜானதிபதியே அவசியும். கூடிப் பேசி பின்னர் சரியான முடிவை தனித்து முன்வைக்கும் தலைமையை நாம் அவரிடம் மட்டுமே காண முடிகிறது. அது அவரது தலைமைத்துவத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை. அவரிடம் அந்த ஆளுமை இருப்பதால் அவரே சிறந்த தலைவராக தொடர்ந்தும் இந் நாட்டை ஆள வேண்டும். மாற்றம், மாற்றம் என எண்ணி நாட்டு மக்கள் படுகுழியில் விழுந்து விடக் கூடாது. எனவே மக்கள் சிந்தித்து வாக்களித்து தமது தலைமையைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் முன்னெப்போதுமில்லாத வகையில் அவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளை ஈட்டித் தரும். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வரவு - செலவுத் திட்டத்தில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் இன்னுமொரு தடவை அவரில் நம்பிக்கை கொள்வது என எழுப்பப்பட்ட வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர், வெறுமனே வெற்று வார்த்தை ஜாலங்களில் சொல்லிவிட்டு போவதை வைத்தன்றி உண்மையில் நிஜத்திலே என்னென்ன விடயங்களை ஒருவர் செய்துள்ளார் என்பதை வைத்தே ஒருவரது நம்பகத் தன்மையை அளவிட முடியும். அந்த வகையில் ஜனாதிபதி வடக்கு மக்களுக்காக நிறையவே செயலில் செய்து காண்பித்துள்ளார்.

அதனை உணர்ந்து மக்கள் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்தவுக்கு கணிசமான அளவு முன்னெப்போதுமில்லாத வகையில் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது எனவும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்

No comments:

Post a Comment