Sunday, December 28, 2014
ரொறன்ரோ::கனடா- TTC பேரூந்து ஒன்றும் தெருக்கார் ஒன்றும் சனிக்கிழமை காலை நகரின் கிழக்கு பகுதியில் மோதியதில் நால்வர் மிதமானது முதல் சிறுகாயங்களிற்கு ஆளாகி சிகிச்சை அளிக்கப்பட்டனர். மெயின் வீதி மற்றும் டன்வோத் அவெனியு பகுதியில் காலை 10.30-மணியளவில் இந்த இருவாகனங்களும் மோதிய சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட படங்களில் இருந்து தெருக்கார் பேரூந்தின் முன்பக்கத்தில் உறுதியாக உட்பொதிந்துள்ளது தெரியவந்துள்ளது.
தாக்கத்தின் சக்தியால் தெருக்கார் தடம்புரண்டதாக கூறப்படுகின்றது. பேரூந்தின் சாரதியும் தெருக்காரில் பயணித்த 3-பயணிகளும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்14-பெண் அமரியா டில்ஜோன் ஸ்காபுரோவில் ஒரு TTC பேரூந்தினால் மோதப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் தாங்கள் ஆப்பரேட்டர் பயிற்சித்திட்டம் சம்பந்தமாக ஒரு ஆய்வு நடாத்த போவதாக தெரிவித்திருந்தது. இத்தகவலை TTC தலைமை நிர்வாக அதிகாரி அன்டி பைவோர்ட் அறிவித்தார். இரு வாகனங்களின் மோதலுக்கான காரணம் தெரியவரவில்லை.
No comments:
Post a Comment