Monday, December 29, 2014
இலங்கை::நான் அரசியல் சாசனத்திற்கு ஏற்புடைய வகையிலேயே மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கோட்பாட்டுகளுக்கு அமைய போட்டியிடுகிறேன் என்று சமீபத்தில் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிலைமை இவ்விதம் இருக்க இங்குள்ள எதிரணியைச் சேர்ந்த தேசத்துக்கு துரோகம் இழைப்போர் வெளிநாடுகளுக்குச் சென்று பல தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். என்னை ஒரு சர்வாதிகாரி என்றும் இவர்கள் தகவல்களை வெளியிடுகிறார்கள் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய இலங்கையை உருவாக்கி மக்களிடையே இன, மத பேதங்களை போக்கி, எங்கள் நாட்டை பாதுகாப்பான சுவர்க்க பூமியாக மாற்றுவேன் என்று ஜனாதிபதி மேலும் உறுதியளித்தார்.
ஜனாதிபதி ஆட்சிமுறையின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம் என்று மேடைகளில் பேசுவதன் மூலம் மாத்திரம் அந்த நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துவிட முடியாது. இதனை ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சியினரும் நன்கு உணர வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டுமாயின் எதிர்க்கட்சியினர் அரசியல் அமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து தங்கள் ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் அதைவிட்டு மேடைகளிலும் பொது இடங்களிலும் வீம்பு பேச்சுகளை செய்வதில் எவ்வித நன்மையும் ஏற்படாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் மற்றெல்லாம் கட்சிகளுக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து, எங்கள் நாட்டின் அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு உதவி செய்யுங்கள் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கமைய யதார்த்த பூர்வமாக செயற்படுவதற்கு பதில், பொது மேடைகளில் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றிவிடுவோம் என்று எதிர்க்கட்சியினர் பேசி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இவர்களின் இத்தகைய தவறான போக்கிற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தக்க பாடத்தைக் கற்பிப்பார்கள் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல கூறினார்.
பிச்சைக்காரனைப் போன்று ரணிலும் சந்திரிக்காவும் யுத்தத்தை தொடர்ந்து நடத்தி பணம் சம்பாதித்தார்கள். ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஆட்சியின் போது 4 லட்சமாக குறைக்கப்பட்ட நாட்டின் அரச ஊழியர்களின் ஆளணியை அரசாங்கம் இன்று 15 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. அன்று இவ்விருவரும் யுத்தத்தை பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்தும் சுயநல நோக்கத்துடன் ஒரு பிச்சைக்காரன் தனது காலில் ஏற்பட்ட புண்ணை குணப்படுத்தாமல் வைத்திருந்து அனுதாபம் பெற்று பிச்சை எடுத்து சம்பாதிப்பதைப் போன்று யுத்தத்தைப் பயன்படுத்தினார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிழக்கிலங்கையில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் உரையாற்றிய அவர் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு பைத்தியக்காரி அனாவசியமான தேவையற்ற குப்பைகளை தனது கூடையில் பாதுகாப்பதற்காக வைத்திருப்பதைப் போன்று அமைந்திருக்கிறது என்றும் ஜனாதிபதி கிண்டல் செய்தார். பொதுமக்களாகிய நீங்கள் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிப்பதற்கு முன்னர் என்னுடைய 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட தீர்மானங்களை வாசித்துப் பாருங்கள். அவை மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞானபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் அணியில் ஒரு பொருளாதார நிபுணரோ ஒரு சிறந்த சட்டமேதையோ இடம்பெறவில்லை. அதனால் பாலர் வகுப்பு பிள்ளையொன்று தயாரித்ததைப் போன்று மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்திருக்கிறது.
எதிரணியில் ஏராளமான முனாபிக்குகள் என்றழைக்கப்படும் நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களை முஸ்லிம் மக்கள் நம்பி ஏமாறக்கூடாது. சம உரிமையுடன் முன்னோக்கிச் செல்ல எனக்கு ஒத்துழையுங்கள் என்று அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண மக்களுக்கு அழைப்புவிடுத்தார்.
அதுபோன்று இன்னுமொரு கருத்தை ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார தகவல் ஊடக சிரேஷ்ட ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். மைத்திரி அணியின் முஸ்லிம் விரோதிகள் இருப்பதனால் அவ்வணியினர் முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிராக செயற்படுவார்கள். மைத்திரியுடன் சேர்ந்துள்ள ஹெல உறுமய கட்சியின் செயலாளர் சம்பிக்க ரணவக்கவின் ஒப்பந்தத்தில் சிறுபான்மை மக்கள் நலன்பேணல் பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, சிறுபான்மை மக்கள் மதிநுட்பத்துடன் சிறந்தித்து தங்கள் பொன்னான வாக்கை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதேவேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் மலையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்களின் ஒருவரும் மத்திய மாகாணசபையின் உறுப்பினருமான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளர் சதாசிவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாக அரசில் இணைந்திருப்பது ஒரு பாராட்டுக்குரிய விடயமாகும்.
ஹெல உறுமய கட்சியின் உதய கம்மன்பில எதிர்பாராத வகையில் அரசாங்க அணிக்கு அளித்து வரும் ஆதரவினால் மைத்திரிபால சிறிசேனவின் எதிரணிக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வணியிலுள்ள ரகசிய தில்லுமுல்லுகள் அம்பலமாகி வருகின்றன.
மைத்திரிபால சிறிசேனவின கீழ் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக சர்வதேச அரங்கில் கண்டனத்தை எதிர்நோக்கும். இவ்வணியிலுள்ள பலதரப்பட்ட ஜனநாயக விரோதிகளினால் நாடு சர்வாதிகாரத்தையும், ஊழல் மோசடிகளையும், பிரிவினவாதத்தையும் நோக்கி பின்னடைவை எதிர்நோக்கும் என்று உதய கம்மன்பில கண்டனம் தெரிவித்துள்ளார்.
(ரின்லிஷ்)என்ற ஆங்கிலப்பதத்திற்கு அமைய மைத்திரிபால சிறிசேன ஆட்சி அமைத்தால் அவரது நிர்வாகத்தில் ரணில் பிரதம மந்திரியாகவும், சந்திரிக்கா நிதியமைச்சராகவும், பொன்சேகா பாதுகாப்பு அமைச்சராகவும், மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவும், சஜித் பிரேமதாஸா சுற்றாடல் துறை அமைச்சராகவும் இருப்பார்கள். சமீபத்தில் வெளிவந்துள்ள ஊடகங்களின் வியூகங்கள் அப்படியான அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்புவதற்கு பதில் அவர்களுக்குள் நாளாந்தம் ஏற்படும் சண்டை சச்சரவினால் நாடு அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்படும் என்று அரசியல் அவதானிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
மைத்திரிபால ஒரு மண் குதிரை
மைத்திரிபால சிறிசேனவை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முயற்சித்தது போல் இருக்கும். ஒன்றரை லட்சம் பேருக்கு அரசாங்கத்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பேன் என்று பொதுமேடைகளில் பேசும் இந்த மனிதன் திரைமறைவில் மற்ற கட்சிகளுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடுத்த பல்லாண்டுகளுக்கு ஒருவரையும் அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று லட்சக்கணக்கான டொலர் நோட்டுக்களை லட்சமாகப் பெற்று, நாடு திரும்பியவுடன் எதிரணிக்கு குரங்குகளைப் போன்று தாவிச் சென்றுவிட்டார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்.
அரசாங்க கட்சியிலிருந்து விலகிய ஓர் அமைச்சர் தான் எடுத்த இந்த முடிவின் மூலம் யாழ்ப்பாணத்து முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். அவருடன் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக நான் நியமித்த இன்னுமொருவரும் நம்பிக்கைத் துரோகம் செய்தவர் எதிரணியில் சேர்ந்துவிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வெளிநாடுகளிலுள்ள எல்.ரி.ரி.ஈ டயஸ் போரா அமைப்புகளுக்கும் மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், தான் ஜனாதிபதியானவுடன் வடக்கு கிழக்கிலுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்கப் போவதாகவும், இவ்விரு பிரதேசங்களிலுள்ள பெரும்பாலான இராணுவ முகாம்கள் மூடப்படும் என்று கூறியிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளையில் ரிசாட் பதியுதீன் வடக்கிலுள்ள முஸ்லிம்களை காட்டிக் கொடுத்துவிட்டார். அவர் இவ்விதம் துரோகம் இழைத்து எதிரணியில் சேர்ந்து கொண்டாலும், அந்த துரோகச் செயல் ஜனாதிபதிக்கு இந்த தேர்தலில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னரே தன்னுடைய உண்மையான சொரூபத்தை மறைத்திருக்கும் மாய முகமூடியை இப்போது களைந்து எறிந்துள்ளார். கனவானைப் போல் வேடம் அணிந்திருக்கும் இந்த மனிதர் வெளிநாட்டிலுள்ள எல்.ரி.ரி.ஈ முக்கியஸ்தர்களிடம் தான் யுத்ததக்குற்றங்களை புரிந்த அரசியல்வாதிகளையும், ஆயுதப் படைகளின் முக்கியஸ்தர்களையும் யுத்த நீதிமன்றங்களில் நிறுத்தி தண்டிப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.
சிந்திக்காமல் கருத்துக்களை வாய்க்கு வந்த மாதிரி வெளியிடும் மைத்திரிபால சிறிசேன ஒரு நேர்மையான அரசியல்வாதியானால் யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் நீதிமன்றத்தின் இறைமை, விசாரணையின் நோக்கம் ஆகியன குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இவ்விதம் இவர் நாட்டுக்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகளை அறியும் உரிமை மக்களுக்கு இருக்கிறது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார். யார் வந்தால் என்ன, யார் போனால் என்ன நான் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி மக்களுடன் கைகோர்த்து ஜனாதிபதியின் தேர்தல் வெற்றிக்கு அயராது உழைப்பேன் என்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அறிவித்திருப்பது சில காட்டிக் கொடுக்கும் அரசியல்வாதிகள் மத்தியிலும் நேர்மையானவர்கள் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது.
ஜனாதிபதி அவர்களுக்கு எதிராக எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் அவற்றை உண்மை, நேர்மை, விசுவாசம் என்ற அஹிம்சா வழியில் ஜனாதிபதிக்கு முழுமையான ஆதரவை வழங்கிவரும் ஈ.பி.டி.பி அமைப்பின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, உலகை வெல்லு வழி மஹிந்த சிந்தனையில் சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கும் தீர்வு காணப்படும் என்ற ஜனாதிபதி அவர்களின் உறுதிமொழியை நாம் மனதார வரவேற்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளையில் கண்டிப் பிரதேசத்தில் மக்கள் ஆதரவுடன் வீற்றிருக்கும் சுற்றாடல் மற்றும் புதிப்பிக்கக்கூடிய சக்தி துறை பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல்காதர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியூதினின் துரோகச் செயலினால் எங்கள் நாட்டிலுள்ள சகல முஸ்லிம்களுக்கும் அபகீர்த்தி ஏற்பட்டிருக்கின்றது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவரான சட்டத்தரணி என். எம். சஹீட் முஸ்லிம் மக்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத மைத்திரிபால சிறிசேனவுக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ஒரு முஸ்லிம் பாடசாலைக்குக்கூட கட்டிடம் ஒன்றைப் பெற்றுத்தர முன்வராதவரும் சுமார் 30 முஸ்லிம்களின் நெல் ஆலைகளை இழுத்து மூட வைத்தவருமான எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு முஸ்லிம் மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
றிஷாத் பதியுதீன் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கப்போவதாக எடுத்த முடிவு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் அல்ல என தெரிவித்துள்ள சட்டத்தரணி சஹீட் எதிரணிக்கு றிஷாத் பதியுதீன் தனியாக செல்ல முடியாத காரணத்தினால் தான் புதிதாக நியமனம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியையும் தன்னுடன் கூட்டிச் சென்றுள்ளார் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தீய சக்திகள் அரபு நாடுகளில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு எடுத்த முயற்சிகளைப் போன்று இலங்கையிலும் ஜனாதிபதி தேர்தலை தவறாக பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் இப்போது படிப்படியாக அம்பலமாகி வருகின்றன.
இந்த சர்வதேச தீய சக்திகள் கோடிக்கணக்கில் டொலர் நோட்டுக்களையும் ஏனைய சர்வதேச கரன்சி நோட்டுக்களையும் இலங்கையின் எதிரணியின் பிரதான வேட்பாளருக்கு அனுப்பி வைக்கும் சதித்திட்டம் இப்போது கையும்மெய்யுமாக பிடிபட்டுள்ளது.
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இலங்கை பணத்தில் 800 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்க கரன்சி நோட்டுக்களை இரகசியப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்தப் பணத்தை மைத்திரிபாலவிடம் கொண்டு சேர்ப்பதற்கு எடுத்துச் சென்ற நபரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல எதிரணியினருக்கென கூடுதலான நிதி சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுவது ஊர்ஜிதமாகியிருக்கிறது என கூறியுள்ளார்.
அரபு வசந்தம் ஒன்றை ஏற்படுத்த முயன்று தோற்றுப்போனவர்கள் தேர்தலைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். இவ்விதம் மஹிந்த ராஜபக்ஷவை பழிவாங்குவதற்காக வெளிநாட்டு தீய சக்திகளுடன் இணைந்து எதிரணியினர் முழு நாட்டையும் சீர் குழைக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் மதிநுட்பமும் அரசியலில் அனுபவ அறிவைக் கொண்ட நம் நாட்டு வாக்காளர்கள் சிந்தித்து தொடர்ந்தும் நாட்டில் தலைமைத்துவத்தினை ஏற்கவேண்டிய ஒரு நல்ல தலைவருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளையில் மலையகத்தின் சக்திவாய்ந்த தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மஹிந்தவின் வெற்றி மலையகத்தின் வெற்றி என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தாங்கள் வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
என்றுமே கட்சி மாறாமல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசுவாசியாக பல தசாப்தங்களாக இருந்துவரும் முஸ்லிம் மக்களின் பேரபிமானம் மிக்க தலைவராக விளங்கும் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வாக்களிப்பது முஸ்லிம் மக்களின் வரலாற்றுக் கடமை என்று வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதிகளால் முஸ்லிம் மக்களுக்கு இருந்த அச்சம், துயரங்களை நீக்கி வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் மக்கள் நன்றியோடு இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதேவேளையில் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணத்தில் உள்ள கையொப்பம் போலியானது எனக் கூறும் மைத்திரிபால சிறிசேன ஏன் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை மறுக்கவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கிலுள்ள இராணுவத்தினர் குறைக்கப்படுவர் என்று இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணம் பொய்யான ஆவணமாக இருந்தால் அதில் குறிப்பிட்டிருப்பதைப் போன்று வடக்கிலிருந்து இராணுவத்தினரைக் குறைக்க மாட்டேன் என்று ஏன மைத்திரிபால சிறிசேன அறிவிப்பதற்கு தயக்கம்
காட்டுகிறார் என்றும் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். நல்லாட்சியை ஏற்படுத்துவேன் என அடிக்கடி கதைத்துவரும் மைத்திரிபால சிறிசேன அது பற்றி ஒரு வசனத்தைக் கூட தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கவில்லை. அத்துடன் பாதுகாப்புக் குறித்தும் எதுவும் இதில் உள்ளடக்கப்படவில்லை.
இவ்விதம் தில்லுமுல்லுகளைச் செய்து மக்களை ஏமாற்றி வாக்குகளைக் களவாட மைத்திரிபால சிறிசேன முயற்சி செய்கின்றார் என்றும் விமல் வீரவன்ச மேலும் கண்டனம் தெரிவித்தார்.
நான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட நாள் முதல் ஓராண்டுக்குள் நாட்டின அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment