Sunday, December 28, 2014

கண்டிப் பிரதேசத்தில் நடைபெறவிருந்த தன் பிரச்சார கூட்டங்களை ரத்து செய்து, ஜனாதிபதி ராஜபக்ஷ் அவர்கள் பதுளை பிரதேசத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு விஜயம்!

Sunday, December 28, 2014
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து இன்று கண்டி மாவட்டத்தில் நடைபெறவிருந்த கூட்டங்கள் எந்தவொன்றிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ள மாட்டாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பதுளை மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை குறித்து நேரடியாக சென்று பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குத் தேவையான விதை நெற்களை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி  குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment