Sunday, December 28, 2014

மோஷமான காலநிலை, இதுவரையில் 23 பேர் உயிரிழப்பு!

Sunday, December 28, 2014
இலங்கை::நாட்டில் தற்பொழுது நிலவும் மோஷமான காலநிலையினால் நான்கில் மூன்று பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தொிவித்தார்.
வெள்ளம், மண் சரிவு போன்ற காரணங்களினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இவ்வனத்தத்தினால் இதுவரையில் 281006 குடும்பங்களிலுள்ள 10 லட்சத்து 16 ஆயிரத்து 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் காணாமல் போயுள்ளனர்.
 
15 பேர் இதுவரையில் காயமடைந்துள்ளனர்.  4571 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 14511 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். ஏனெனில், வெள்ளம் வற்றிய பின்னரே சரியான கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும்.
 
576 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்,  33398 குடும்பங்களைச் சேர்ந்த 115658 பேர் தற்பொழுதுவரை தங்கியுள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள மற்றும் வேறு இடங்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு நாம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
 
நாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதியளவு உதவிகளை வழங்கிவருகின்றோம்.  அதிகாரிகளில் சிலர் ஒழுங்காக செயற்படுவதில்லையென தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறானவர்கள் தொடர்பில் சட்ட ரீதியில் நடவடிக்கையெடுக்க நாம் தயாராகவுள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

More Pohtos>>

No comments:

Post a Comment