Tuesday, December 02, 2014
இலங்கை::ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் வெற்றிபெற்று மூன்றாவது ஜனாதிபதி காலம் முடிவடைய முன் ஜனாதிபதி ஆட்சி முறை இந்நாட்டு அரசியலிலிருந்து ஒழிக்கப்படும்.
இலங்கை::ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் வெற்றிபெற்று மூன்றாவது ஜனாதிபதி காலம் முடிவடைய முன் ஜனாதிபதி ஆட்சி முறை இந்நாட்டு அரசியலிலிருந்து ஒழிக்கப்படும்.
அதற்கு பின் இந்த நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் இருக்க மாட்டார் என்று இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார்.
மாத்தறை மாவட்டத்தில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு ரண்பிம காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் (29.11) வைபவத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மேலும் பேசுகையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று கோஷமிடுபவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கே முயற்சி செய்கின்றனர்.
ஜனாதிபதிக்குள்ள ஒரேயொரு பாதுகாப்பு நிறைவேற்று ஜனாதிபதி முறையாகும். இதனை ஒழித்தால் ஜனாதிபதியை இலகுவில் யுத்த நீதிமன்றத்தில் ஆஜர் செய்யலாம் என்று அல்ஜஸிரா ரூபவாஹினிச் சேவை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நீலம், பச்சை, சிவப்பு கொடிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இந்நிறக் கொடிகளால் எமக்கு பிரயோசனமில்லை நாட்டிற்குத் தேவை தேசியக் கொடியாகும். அதனை எமக்குப் பாதுகாத்துக் கொடுத்தவர் நமது ஜனாதிபதியே.
நாட்டின் பல பகுதிகளிலும் அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வளமான நாடாக எமது நாடு திகழ்கிறது என்றும் கூறினார்.
No comments:
Post a Comment