Tuesday, December 02, 2014
வாஷிங்டன்::அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தின் துல்சா நகரை சேர்ந்தவர் கிறிஸ்டா
ஏஞ்சல்ஸ். ராணுவ அதிகாரியான 26 வயது கிறிஸ்டாவுக்கு 3 வயதில் ஒரு ஆண்
குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். அண்மையில், மகளின்
‘டயாபரை’ கிறிஸ்டா மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 3 வயது
மகன், தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தாயாரின் தலையை நோக்கி
விளையாட்டுத்தனமாக சுட்டான். இதனால் தலையில் குண்டு பாய்ந்து கிறிஸ்டா
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாயாரை துப்பாக்கியால் சுட்ட மகனோ நடந்த விபரீதம் புரியாமல் மழலை மொழியில் ‘மம்மி சூட்’, ‘மம்மி சூட்’ என்று திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருந்தான். துப்பாக்கியை குழந்தையின் கையில் கிடைக்கும் விதமாக வைத்திருந்ததால் இந்த துயரச்சம்பவம் நடந்ததாக துல்சா நகர போலீசார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment