Tuesday, December 2, 2014

கனடிய பெண்ணை கடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ்: அரங்கேறவிருக்கும் அடுத்த தலைத் துண்டிபு!

Tuesday, December 02, 2014
கனடிய பெண் ஒருவரை ஐ,எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கோபேனி (Kobani) நகரை கைப்பற்றுவதற்கு மும்முரமாய் உள்ளனர்.

இவர்களை எதிர்த்து அப்பகுதியில் வாழும் குர்திஷ் படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதை அறிந்த கில் ரோசன்பர்க் (Gill Rosenberg Age-31) என்ற கனடிய பெண் சமீபத்தில் சிரியாவிற்கு சென்று குர்திஷ் பெண் படையில் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக போர் புரிந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் இவர் தாக்குதல் நடத்தியபோது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தி கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது பிணைக்கைதியாக அடைத்து வைக்கப்பட்ட இவரை தலைத் துண்டித்து கொல்ல வேண்டும் என தீவிரவாதிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள். தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment