Tuesday, December 2, 2014

கனமழையால் வடக்கில் 38,887 பேர் பாதிப்பு!

Tuesday, December 02, 2014
இலங்கை::வடக்கில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. 
 
10ஆயிரத்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ  அமைச்சு தெரிவித்துள்ளது. ஆயிரத்து 889 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஒரு வார காலமாக  வடக்கு மாகாணம் முழுவதிலும் கனமழை பெய்து வருகின்றது. 
 
அதனால்  கிளிநொச்சி மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.
 
பருத்தித்துறை திக்கம் பகுதி கடற்கரை வீதியில் உள்ள கடற்கரை அணைக்கட்டுக்கள், கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக தற்போது உடைப்பெடுத்துள்ளன.
 
கடற்கரை அணைக்கட்டுக்கள் உடைந்ததன் காரணமாக அப்பகுதி போக்குவரத்துக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. 
 
அத்துடன் கடல் நீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் உட்செல்வதற்கு வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
 

No comments:

Post a Comment