Tuesday, December 2, 2014

ஜனாதிபதித் தோ்தலில் தமிழா் வாக்குகளுக்காக 100 கோடி ரூபா பேரம் பேசியுள்ளது: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு!

Tuesday, December 02, 2014
இலங்கை::
தமிழா் வாக்குகளை நூறு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யவுள்ளது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.  ஜனாதிபதித் தோ்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபாலசிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா ஆகியோர்களுடன்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இது தொடா்பான இரகசியப் பேச்சுவார்த்தைகளில்  கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈடுபட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
 
இப் பேச்சுவார்த்தையில் வடக்குக் கிழக்கில் உள்ள ஆளுநா்களை மாற்றுவது,  13வது திருத்தச் சட்டங்கள் பற்றியவையும், கிழக்கில் முஸ்லீம்களுக்கு என தனியான  நிர்வாக அலகொன்றை உருவாக்குவது பற்றியும்  ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.
 
இந்த பேச்சுவார்த்தையில் மாகாணசபை அதிகாரங்களில் 13+ ற்கு மேலதிகமாக எதுவும்  தரப்போவதில்லை என சந்திரிக்கா குமாரதுங்கா  கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
 
மைத்திரிபாலசிறிசேனவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக நுாறு கோடி ரூபாவும் கூட்டமைப்பினா் கேட்டுள்ளனா். கடந்த  ஜனாதிபதித் தோ்தலின் போது சரத் பொன்சேகராவை ஆதரிப்பதற்காகவும் பிரச்சாரத்திற்காகவும் நுாறு கோடி ரூபா பேரம் பேசப்பட்டு  இதன் பின்னரே சரத்பொன்சேகராவுக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது.
 

No comments:

Post a Comment