Sunday, December 28, 2014

முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கு ஆதரவு: ரவூப் ஹக்கீம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

Sunday, December 28, 2014
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதி தேர்துலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப்படுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக்கிழமை, 28 ஆம் திகதி சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இன்று காலை 10.30 மணிக்கு தாருஸ்சலாமில் ஜனாதிபதி மஹிந்தர ராசபக்சவின் ஆட்சியில் இருந்து அமைச்சர்களை விலக்கிக்கொண்டும் எதிர்கட்சி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க் கட்சிக்கு ஆதரவு வழங்கியதனால் பொது வேட்பாளருக்கு கட்சி மாறி ஆதரவு வழங்கிய அரச தரப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்தவகையில், ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள், 13 மாகாண சபை உறுப்பினர்கள், 163 உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவு எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்குக் கிடைத்துள்ளது.
இவர்களில் சபைத் தலைவர்கள், மேயர்கள் ஆறுபேரும் அடங்குவதாகவும் ஸ்ரீ.ல.மு.கா. இன் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீதி அமைச்சுப் பதவியை தான்  இராஜினாமாச் செய்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவுத் இன்று இராஜினாமாச் செய்யவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்  தெரிவித்தார்.
 
எதிர்வரும் கிழக்குமாகாண சபை வரவு செலவுத் திட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவு அரசாங்கத்துக்கு வழங்கும் எனவும் கட்சித் தலைவர் ஹக்கீம் தற்பொழுது  ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.
 
இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாநாகர, உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் சகலரும் கலந்துகொண்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment