Sunday, December 28, 2014
இலங்கை::ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட கிழக்கு மாகாண கரையோர மாவட்டக் கோரிக்கையை அரசாங்கம் புறக்கணித்தமையே அக்கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதற்குக் காரணம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.

தற்பொழுது கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.ம.சு.முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இதில் புதிய ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மம்பிலவும் கலந்துகொண்டுள்ளார்.
மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் தனிநாடு உருவாகுவதற்கு எந்தவகையிலும் இடமளிக்கப் போவதில்லை எனும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. இவர்களின் கோரிக்கைக்கு பொது வேட்பாளர் மைத்திரிபால் சிரிசேன உடன்பட்டிருப்பார். இதனாலேயே அக்கட்சி எதிர்க் கட்சிக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து எமது அலுவலக செய்தியாளர்
No comments:
Post a Comment