Sunday, December 28, 2014
இலங்கை::பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோதப் போக்கினை மஹிந்த அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாம். அதனால்தான் தான் அரசிலிருந்து வெளியேறுகிறாராம். நல்லவேளை தேர்தல் வந்ததால் அமைச்சர் றிசாத் இப்போதாவது இதனைக் கண்டுபிடித்தார். இல்லாவிட்டால் ஜனாதிபதியின் பதவிக் காலம் இன்னமும் இரண்டு வருடங்களில் முடிந்து அப்போது தேர்தல் வரும்போதுதான் கண்டு பிடித்திருப்பார். என்னடா உலகம் இது?
இலங்கை::பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோதப் போக்கினை மஹிந்த அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாம். அதனால்தான் தான் அரசிலிருந்து வெளியேறுகிறாராம். நல்லவேளை தேர்தல் வந்ததால் அமைச்சர் றிசாத் இப்போதாவது இதனைக் கண்டுபிடித்தார். இல்லாவிட்டால் ஜனாதிபதியின் பதவிக் காலம் இன்னமும் இரண்டு வருடங்களில் முடிந்து அப்போது தேர்தல் வரும்போதுதான் கண்டு பிடித்திருப்பார். என்னடா உலகம் இது?
இதனை நம்புபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இதனையே இவர் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக கூறி அதிரடியாக வெளியேறியிருந்தால் இவர் ஹீரோ. ஆனால் இப்போது அவர் அஸ்வர் அவர்கள் கூறியதுபோல சீரோவாகியுள்ளாராம். என்னதான் இருந்தாலும் மைத்திரி ஆட்சி அமைப்பார் அதில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற இவரைப் போன்றவர்களது கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை கட்சி தாவுவோர் விரைவில் உணர்வர். எப்படியும் இவர்கள் எல்லோருமே இக்கரைக்கு மீண்டும் வந்தே ஆக வேண்டும். அப்போது எங்கே போய் முகத்தை வைக்கப் போகிறார்களோ தெரியவில்லை. அரசியலில் இதுவெல்லாம் சகஜம்தானே என்று கூறிக்கொள்வார்களோ?
* இவரைப் போல பெரிய மனசு நிச்சயம் எவருக்குமே வராது
பதினேழு மாவட்டங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால வெற்றி பெறுவாராம். சோதிடராக மாறியுள்ள மனோ கணேசன் இவ்வாறு அறிக்கை விட்டிருக்கிறார். தொண்டை தண்ணீர் வற்றிய பின்னரும்கூட அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்துவரும் அவர் நேற்று வரை அதே அரசில் முக்கிய பதவி வகித்த மைத்திரியை இப்படி வாழ்த்துகிறார். உண்மையில் இவரைப் போல மிகப்பெரிய மனசு எவருக்குமே வராது. ஒருவேளை பொது எதிரணி வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த கட்சி மாறிப் போட்டியிட்டிருந்தாலும் மனோ கணேசன் நிச்சயம் அப்பவும் இப்படித்தான் நடந்திருப்பார். நல்ல கொள்கை, மிகப்பெரிய மனசு.
* மனம்மாறிய தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு?
ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை நன்கு வரி வரியாக எழுத்துக்கூட்டிப் படிக்கிறதாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதனால்தான் தமது முடிவை அறிவிக்க தாமதமாவதாகவும் தெரிவித்திருக்கிறது. இதுவரை காலமும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தமது முதலாவது எதிரியாக பிரசாரம் செய்து வந்த ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆழமாகப் படிப்பதே அவரை அவர்கள் ஆதரிப்பதற்குச் சமனான விடயம். மைத்திரியின் விஞ்ஞாபனத்தில் தமிழர் தொடர்பாகவோ இனப்பிரச்சினை தொடர்பாகவோ எதுவுமே இல்லை என்பது தெளிவான விடயம். இப்போதாவது அந்த உண்மை அறிந்து இனி எல்லாமே நன்றாகவே நடக்கும்.
* மன்னார் ஆயரின் வேண்டுதல் பலிக்கும்
நல்லதொரு தலைவரை எமக்கு இறைவன் தரவேண்டும் என அவரிடம் வரம் கேட்போம். ஏனென்றால் இன்றைய சூழலில் நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை மக்களாக இருந்தால் என்ன எல்லா மக்களையும் சமத்துவமாக மனித மாண்புடன் வழி நடத்தும் தலைவரை இறைவன் எமக்குத் தர வேண்டும் என நாம் அவனை நோக்கி பிரார்த்திக்க வேண்டும். அதற்காக நீதிக்காகவும் அமைதிக்காகவும் நாமும் உழைக்க வேண்டும்.
இயேசு பாலன் பிறந்த தினமான நத்தார் திருப்பலியின் போது மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜோஸப் ஆண்டகை இவ்வாறு உரையாற்றினார். உண்மையில் ஆயர் அவர்கள் கூறியது போன்று இந்த நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை மக்களாக இருந்தால் என்ன எல்லா மக்களையும் சமத்துவமாக மனித மாண்புடன் வழி நடத்தும் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே விளங்குகிறார். அதனால் ஆயர் அவர்களின் இறை வேண்டுதல் இத்தடவையும் ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றியின் மூலமாக நிறைவேறும்.
No comments:
Post a Comment