Monday, December 29, 2014

பொதுக் கட்சியிடம் கோடிகள் பெற்றார் சேனாதியா் - குமுறுகிறார் சுரேஸ்!

Monday, December 29, 2014
இலங்கை::ஜனாதிபதி தோ்தலில், பொதுக்கட்சிகள் சார்பாகப் போட்டியிடுபவருக்கு ஆதரவளிப்பதாக் கூறி, அக் கட்சியிடம் இருந்து ஒரு 4 கோடி ரூபா பெறுமதியான வீடும் 6 கோடி ரூபாவும்  கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தைச் சோ்ந்தவா்கள்  பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வருங்காலத்தில், மைத்திரி ஜனாதிபதியாக வந்தால்  பொருளாதார அமைச்சராக வருவார் என பலராலும் சொல்லப்பட்டும் குறித்த நபரும்  அதைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருக்கும் மக்கள் ஆதரவு இல்லாமலே எம்.பி ஆகியவருமான கூட்டமைப்பின் நரி என கூறப்படும் நபருக்கு  கொழும்பில் அந்த 4 கோடி ரூபா பெறுமதியான வீடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
 
சேனாதியா் தான் பெற்றுக் கொண்ட பணத்தில் சிறு பகுதியை செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட சிலருக்குப் பகிர்ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
 
இப் பணம் போதாது என அவா்கள் அடம்பிடித்துக் கொண்டு நிற்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதே வேளை தான் இந்தியாவில் நிற்கும் போது மாவை எப்படிப் பணத்தைப் பெறலாம். இவா் எப்படி  பணத்தைப் பகிர்ந்து கொடுக்கலாம், யாரைக் கேட்டு இவற்றையெல்லாம செய்தார் என சுரேஸ் பிரேமச்சந்திரன் குமுறிக் கொண்டு இருப்பதாகத் தெரியவருகின்றது.
 
மொத்தத்தில் தமிழருக்கு ஆப்படிக்க நினைக்கும் கட்சியுடன் சோ்ந்து, இருக்கும் கோவணத்தையும் பறிக்கு நிலைக்கு உள்ளாக்கும்  வகையில் கூட்டமைப்புத் தலைமைகள் தங்களின் சுயநலத்திற்காக மக்களை விற்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என தமிழ்த் தேசியப் பற்றுமிக்கவா்கள்  தெரிவித்துள்ளனா்.
 

No comments:

Post a Comment