Monday, December 29, 2014

திருப்பெருந்துறை வீதி போக்குவரத்து பாதிப்பு ; மக்கள் படகுகளில் பயணம்: பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நேரில் சென்று உதவி!

Monday, December 29, 2014
இலங்கை::மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருப்பெருந்துறை கிராம மக்களை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நேரில் சென்று பார்வையிட்டார். மட்டக்களப்பில் அண்மைய நாட்களில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
 
 வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் நேற்று மாலை (28.12.2014) நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அத்துடன் அங்கு தங்கியிருக்கும் 56 குடும்பங்களுக்காக அதிதியாவசிய தேவைகளான பாய், படுக்கை விரிப்பு போன்றவற்றினையும் வழங்கிவைத்தார். குறித்த இப்பகுதிக்கான தரைவழிப் பாதை முற்றாக வெள்ள நீரினால் மூழ்கியுள்ளதனால் அப்பகுதிக்கான போக்குவரத்திற்காக மக்கள் தோணிகளை பயன்படுத்தியே தமது போக்குவரத்தினை மேற்கொன்ன்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment