Monday, December 29, 2014
மைசூர்::பெங்களூரில் பரபரப்பாக இயங்கக்கூடிய இடங்களில் ஒன்று சர்ச் தெரு. இங்கே
உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் முன்பு நேற்று இரவு 8.30 மணியளவில் வீரியம் குறைந்த
குண்டு ஒன்று வெடித்தது.
இதில் பெண் ஒருவர் உள்பட இருவர் காயம் அடைந்தனர். உடனே அவர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.
அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இடத்தை தங்கள் பாதுகாப்புக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைசூருவில் முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பெங்களூருவில் உள்ள சர்ச்தெருவில் நேற்று இரவு 8.30 மணியளவில் குண்டுவெடித்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி என்ற பெண் பலியாகி இருக்கிறார். இந்த துயர சம்பவம் நடந்தது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. மேலும் 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது மருத்துவ செலவை அரசே ஏற்கும். புத்தாண்டை சீர்குலைக்கவும், பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவும் குண்டுவெடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
போலீசார் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர். எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று உறுதி அளித்துள்ளார். போலீஸ் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மும்பையில் இருக்கிறார். அவர் உடனடியாக பெங்களூருக்கு புறப்பட்டு வருகிறார். நானும் பெங்களூருக்கு விரைகிறேன்."
இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

No comments:
Post a Comment