Tuesday, December 30, 2014
சுரபாயா::இரண்டு தினங்களுக்கு முன்பு 162 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த குழுவினரும் இன்று மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூடுதல் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்தோனேஷியாவின் சுரபாயா விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை சிங்கப்பூருக்கு மலேசியாவை சேர்ந்த ஏர் ஆசியாவின், பிகியூ.இசட்-8501பீ என்ற விமானம், 155 பயணிகள், 7 ஊழியர்கள் என 162 பேருடன் புறப்பட்டது. சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், 42வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

சுமத்திரா கடல் பகுதியில் உள்ள காலிமந்தன், பிலிடன் தீவு இடையே சென்றபோது விமானம் மாயமானது தெரியவந்தது. 162 பேருடன் சென்ற விமானம் காணாமல்போனது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாயமான விமானத்தை தேடும் பணி தொடங்கியது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளும் இந்தோனேஷிய அரசுக்கு ஆதரவாக தங்களது மீட்புக் குழுக்களை அனுப்பி வைத்தன.இந்நிலையில், நங்கா தீவில் விமானத்தின் சில உடைந்த பாகங்களும், சுமத்ரா கடல் பகுதியில் 2 இடங்களில் எண்ணெய் படலங்கள் இருப்பதையும் மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்டவை விமானத்தின் பாகங்களா என்பதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மோசமான வானிலை காரணமாக விமானம் கடலில் மூழ்கி இருக்கலாமா அல்லது ஏதேனும் சதி செயல் நடந்துள்ளதா என்ற சந்தேகமும் எழுதுள்ளது.
க
டந்த 2 நாட்களாக விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. விமானத்தை தேடும் பணி கடற்பகுதியில் மட்டுமல்லாமல் நிலப்பரப்பிலும் நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ஈடுபடும் விமானம், கப்பல்கள், ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.30 கப்பல்கள், 15 விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுதவிர அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் தங்களது மீட்பு குழுவினரை அனுப்பி வைக்கின்றன. இவர்கள், இந்தோனேஷிய மீட்பு குழுவினருடன் இணைந்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
No comments:
Post a Comment