Tuesday, November 4, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்னமும் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புகளைப் பேணி வருகின்றார்கள் : எஸ்.பி. திஸாநாயக்க!

Tuesday, November 04, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தொடர்ந்தும் புலிகளின் தலைவர்  பிரபாகரனை தோளில் சுமந்துசெல்வதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் புலிகளின் போராட்டக் கோசங்களை பின்பற்றி வருவதாக பாராளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்னமும் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தொடர்ந்தும் ஆளும் கட்சி புலிகள் பற்றி பேசுவதாகவும்,  புலிகளின் அச்சுறுத்தல் நாட்டில் நீடித்து வருவதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவுடன் எந்தவிதமான பகமையையும் பாராட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேசிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சிறந்த முறையில் வெளிவிவகாரக் கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சீனாவைப் போன்றே இந்தியாவும் பொருளாதாரத்தில் உலக அளவில் முன்னேற்றமடைந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment