Tuesday, November 25, 2014

ஜனாதிபதி மஹிந்தவை வெற்றியடையச் செய்ய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செற்பட வேண்டும் திகாம்பரம்!

Tuesday, November 25, 2014
இலங்கை::ரெலியாவிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென தேசிய மொழிகள் பிரதி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
 
2010ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் நாங்களும் ஈடுபட்டோம். எனினும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த மகத்தான வெற்றியீட்டினார்.
பின்னர் அவரிடம் சென்று சேர்ந்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
 
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அமோக வெற்றியடைச் செய்ய வேண்டும்.
 
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி நுவரெலியாவில் தோல்வியைத் தழுவினார். ஏனெனில் நாம் எதிரணிக்கே ஆதரவளித்திருந்தோம்.
 
ஜனாதிபதி வெற்றியீட்டியதன் பின்னர் நாம் அவரிடம் சென்று பெருந்தோட்டப் பகுதியில் பாரியளவு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
 
மீண்டும் ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட முடியாது.எனவே ஜனாதிபதி மஹிந்தவை வெற்றியடையச் செய்ய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செற்பட வேண்டுமென பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.,

No comments:

Post a Comment