Sunday, November 2, 2014

பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை: நிமால் சிறிபால டி சில்வா!

Sunday, November 02, 2014
இலங்கை::பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் உத்தியோக பூர்வமாக நிபந்தனைகளையோ ஏனைய விடயங்களையோ கூட்டமைப்பு முன்வைக்க வில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேச்சுவார்த்தைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமாயின் அது குறித்து அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவும் வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆற்றும் உரைகள் போதுமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏதேனும் நிபந்தனைகள் இருந்தால் அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட மூன்று வாக்குறுதிகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment