Sunday, November 2, 2014

அரசாங்கத்திற்கு எதிராக மும்முனைத் தாக்குதல் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது: விமல் வீரவன்ச!

Sunday, November 02, 2014
இலங்கை::அரசாங்கத்துக்கு எதிராக மும்முனைத் தாக்குதலுக்கான தயார்படுத்தல்கள் நடைபெறுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
வரவு-செலவுத்திட்டம் தொடர்பாக நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக மும்முனைத் தாக்குதல் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி ஒருபுறம், ஜே.வி.பி.யின் இடதுசாரித் தாக்குதல் ஒருபுறம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாதத் தாக்குதல் ஒரு புறம் என்று மும்முனைத் தாக்குதல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
ஆனால் இவை எல்லாவற்றையும் விட பொதுமக்கள் மத்தியிலிருந்து எழும் எதிர்ப்புச் சுனாமியில் ஐ.தே.க. விரைவில் அடித்துச் செல்லப்பட்டு விடும். எதிர்க்கட்சிகளின் அரசியல் பலவீனம் இந்த வரவு செலவுத்திட்டத்திலேயே வெளிப்பட்டு விட்டது.
 
ஜனாதிபதியின் அரசியல் ஆளுமைக்கு முன்னால் எதிர்க்கட்சிகள் இனியும் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியாது. வாக்குகளைக் குறிவைத்து அளிக்கப்பட்ட லஞ்சம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும் வரவு செலவுத்திட்டத்தின் சாதகம் குறித்து பொதுமக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment