Monday, November 3, 2014

மீனவர்களுக்கு தூக்கு: இலங்கை கோர்ட்டில் இன்று அப்பீல்!

Monday, November 03, 2014
புதுடெல்லி::ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் வில்சன், எமர்சன், பிரசாத், அகஸ்டஸ், லாங்லெட் ஆகிய 5 பேர் கடலுக்கு மீ ன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படை பிடித்து சென்றது. அவர்கள் மீது போதை பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
மீனவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் மூலம் 5 மீனவர்களுக்கான வழக்கை நடத்தி வந்தது. கொழும்பு ஐகோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் தூ க்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக 1 4 நாட்களுக்குள் அப்பீல ் செய்யலாம் என்றும் அவகாசம் அளிக்கப்பட்டது.
 
இந்த விவகாரத்தில் முதல்கட்டமாக தமிழக மீனவர்கள் சார்பில் கொழும்பு ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. இதையடுத்து இலங்கை சிறையில் உள்ள 5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 
இது தொடர்பாக அங்கு ஒய்.கே. சின்கா, வெளியுறவு துறை செயலர் சுஜாதாசிங்குக்கு இமெயில் அனுப்பி உள்ளார். அதில் தமிழக மீனவர்கள் உட்பட 8 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு, அதை எதிர்த்து அப்பீ ல் செய்ய சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளதாக டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இதற்கிடையே இந்திய தூதரகம் சார்பில் வக்கீல் அனில் சில்வா கூறுகையில், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து இன்று திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க் கிழமை கொழும்பு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்படும் என்றார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சம்பித்பித்ரா நிருபர்களிடம் கூறுகையில், தமிழக மீனவர்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் முன்வைக்க போதுமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று மத்திய அரசு கருதுகிறது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே முந்தைய ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட தற்போது இணக்கமான உறவு நிலவுகிறது. இதை பயன்படுத்தி ராஜ்ய முறையில் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்தி யஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா. ஜனதா வலியுறுத்துகிறது.
 
தூக்கு தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பது தமிழக மீனவர்களுக்கு சாதகமான நடவடிக்கைதான். இதை பா.ஜனதா வரவேற்கிறது. எனினும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நாட்டு சட்டப்படி அந்த நாட்டு சிறையில் உள்ளனர். எனவே அந்த நாட்டு அரசுடன் ராஜ்யி முறையிலும், சட்ட ரீதியாகவும் பேசி மீனவர்கள் விடுதலை செய்யவோ, இந்தியாவுக்கு கொண்டு வரவோ மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment