Monday, November 03, 2014
இலங்கை::இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ரணசிங்க பிரேமதாசவின் புதல்வருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை::இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ரணசிங்க பிரேமதாசவின் புதல்வருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
1987ம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவிற்கும், பிரதமர் ரணசிங்க பிரேமதாசவிற்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7 லக்ஸ்மன் கதிர்காமர் கேந்திர நிலையத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அமரர் பீ.சீ. இம்புலானவின் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலப்பகுதியில் இரவு நேரத்தில் அலரி மாளிகைக்கு வரும் ஆளும் கட்சி உறுப்பினர்கள், அரசாங்கத்தை விட்டு விலகி தனியொரு குழுவினை உருவாக்குமாறு தந்தையை வற்புறுத்தினார்கள் என சஜித் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இரவு நேரங்களில் அலரி மாளிகையில் நடத்தப்பட்டது எனஅவர் தெரிவித்துள்ளார்.
பத்து லட்சம் வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு அப்போதைய அரசாங்கத்தின் சிலர் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், அதனைத் தொடர்ந்து செவன என்னும் லொத்தர் சீட்டின் ஊடாக வீடுகளை நிர்மானிப்பதற்கு ரணசிங்க பிரேமதாச நடவடிக்கை எடுத்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு ரணசிங்க பிரேமதாச எதிர்ப்பை வெளியிட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
1977ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட திறந்த பொருளாதாரம் ஒர் கடும்போக்குவாத கொள்கை எனவும், செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்கி வறியவர்களை மேலும் வறியவர்களாக மாற்றி யுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட எத்தனை பேர் தமது நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கின்றார்கள் என்பதனை அறிந்துகொள்ளும் நோக்கில் அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச, அலரி மாளிகையில் விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார் எனவும், 148 ஆளும் கட்சி உறுப்பினர்களில் ஒருவரே இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்தார் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment