Monday, November 03, 2014இலங்கை::ராணுவ அதிகாரிகள் சிலரை வில்பத்து சரணாலயத்தினுள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு படுகொலை செய்ததாக குற்றம்சுமத்தப்பட்ட 2 முன்னாள் புலி உறுப்பினர்கள் மீண்டும் விளக்கமளியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
கஜபா ராணுவ படையணியின் படை நிறைவேற்ற அதிகாரி உள்ளிட்ட 8 பேரை வில்பத்து சரணாலயத்தில் வைத்து படுகொலை செய்தாக இவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
அனுராதபுர விசேட மேல்நிதிமன்ற நீதிபதி பேமா சுவர்ணாதிபதி முன்னிலையில் இந்த இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
இதன்போது, பிரதிவாதிகளை எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட தருணத்தில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment