Monday, November 03, 2014
சென்னை::தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:
தமிழக மக்களுக்கு வளம் சேர்க்க புதிய இயக்கத்தை துவங்க உள்ளோம்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொண்டர்கள், தலைவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளேன். அவர்கள் கருத்துக்களை அறிந்து கொண்ட பின்னர், எனது முடிவை உறுதியாக அறிவிப்பேன்.
தமிழக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் புதிய அரசியல் பாதையை அமைத்து, மக்களுக்கு பணியாற்றுவோம்.
ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுத்தர எங்களை அர்ப்பணித்துக் கொள்வோம்.
மாநில பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் முயற்சியோடு எங்கள் புதிய இயக்கம் துவங்குகிறது.
வளமான தமிழகம் தான் எங்கள் குறிக்கோள். எங்களுக்கும், நாங்கள் இருந்த இயக்கத்திற்கும் நோக்கம் ஒன்றாக இருக்கலாம்.
ஆனால், அந்த லட்சியத்தை அடைய வேண்டிய நடைமுறைகள் வேறாக இருக்கும்.
இளைஞர்கள் புதிய விடியலை, அரசியல் கலாசாரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அதை உணர்ந்து செயல்படுவோம்.
திருச்சியில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் எங்கள் புதிய இயக்கம் குறித்து விரிவாக கூறுவோம். இவ்வாறு வாசன் கூறினார்.
No comments:
Post a Comment