Monday, November 03, 2014
சென்னை::இலங்கை சிறையில் உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த ஐந்து மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யவும், அவர்களை விடுதலை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியும் மீனவர்களின் குடும்பத்தினர், இன்று முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கின்றனர்.
ராமேசுவரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகியோர் போதைப் பொருள் கடத்தியதாக கடந்த 2011–ம் ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு மீனவர்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போராட்டங்களும் வெடித்தன. பஸ்சுக்கு தீ வைப்பு, கல்வீச்சு, ரெயில் தண்டவாளம் சேதம் என பல சம்பவங்கள் நடைபெற்றன. அவர்களை அன்வர்ராஜா எம்.பி. சந்தித்து பேசியதன் அடிப்படையில் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.
அடுத்த கட்டமாக 5 மீனவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யவும் அவர்களை விடுதலை செய்து தமிழகம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க கேட்டு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அன்வர்ராஜா எம்.பி., தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மீனவ சங்க பிரதிநிதிகள் இன்று சென்னையில் முதல்வரை சந்திக்கின்றனர்.
இந்நிலையில் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் 'தந்தி தொலைக்காட்சி'க்கு இன்று காலை பேட்டியளித்தனர். அதில் ஐந்து மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுகொண்டனர். பிரதமர் மோடி பேசினாலே இவ்விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும். இதற்காக மத்திய அரசை வலியுறுத்தவே தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம்.
மீனவர் சங்க பிரதிநிதி பேசும்போது, நிரபராதி மீனவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனிடையே இன்று ராமேஸ்வரத்தில் மூன்றாவது நாளாக மீனவர்களின் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment