Monday, November 03, 2014
ராமேசுவரம்::ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் மீனவர்கள் லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ்,
வில்சன், எமர்சன் ஆகியோர் போதை பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினரால்
கடந்த 2011–ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 5 பேருக்கும் கடந்த 30–ந்தேதி தூக்கு தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த
தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்த தங்கச்சிமடம் மீனவர்கள் மறியல் உள்ளிட்ட
போராட்டங்களில் இறங்கினர். பின்னர் அதனை கைவிட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை
நிறுத்தத்தை அறிவித்தனர். பாம்பன், ராமேசுவரம் மீனவர்களும் இந்த
போராட்டத்தில் கைகோர்த்தனர்.
இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்
யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகு மீனவர்கள்
மட்டுமின்றி நாட்டுப்படகு மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கியதால்
அனைத்து படகுகளும் கரைகளில் நிறுத்தப்பட்டன.
ராமேசுவரம்
மீனவர்களுக்கு ஆதரவாக நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு
பகுதி மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களின்
இந்த வேலை நிறுத்தத்தால் மீன் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 2
லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் போராட்டம்
காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment