Monday, November 3, 2014

இலங்கை அகதிகள் வெளிநாடு செல்ல ஏஜெண்டுகளை நம்பி ஏமாற வேண்டாம்: சைலேந்திரபாபு!

Monday, November 03, 2014
மதுரை::மதுரை ஆனையூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், தமிழக கடலோர காவல் படையின் கூடுதல்
 
டி.ஜி.பி. சைலேந்திராபாபு ஆய்வு செய்தார். அப்போது பேச்சு மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
 
பின்னர் முகாமில் தங்கி இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து இதுகுறித்து முகாம் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
 
அதன்பின் நிருபர்களுக்கு சைலேந்திரபாபு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: –
 
தமிழகத்தில் 12 இடங்களில் கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 30 ஆக உயர்த்த அனுமதி தரப்பட்டுள்ளது. இந்திய கடல் பகுதியில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி செல்வது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
 
தமிழக முகாமில் உள்ள இலங்கை அகதிகள் எந்த காரணம் கொண்டு ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும், முறையாக அனுமதி பெற்று செல்லலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளோம்.
ஏஜெண்டுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்து செல்வதாக பெருந்தொகையை வசூலித்து விட்டு, நடுக்கடலில் அவர்களை இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். எனவே ஏஜெண்டுகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment