Monday, November 03, 2014
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் புதல்வி துலாஞ்சலி வங்கியில் வைப்புச்செய்யசென்ற வேளை அவரிடமிருந்து மீட்கப்பட்ட போலி ரூபாய்நோட்டுகள் குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மீள ஆரம்பித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவராக நியமிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாசாவை அச்சுறுத்துவதற்காகவே இந்த விசாரணை மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய சஜித்திற்க்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை மௌனமாக்கி வந்தார். எனினும் சஜித் தனது உத்தரவுகளை சமீபத்தில் மதிக்காததால் அவர் சீற்றமடைந்துள்ளார், இதனால் சஜித்தின் சகோதரி மீதான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சஜித்தின் சகோதரியான துலாஞ்சலி வங்கியில் வைப்புச்செய்யசென்ற வேளை அவரிடமிருந்து போலி ரூபாய் நோட்டுக்கள் மீட்கப்பட்டதும்,இது தொடர்பாக வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் சிறிது நாட்களின் பின்னர் மேலிடத்தின் உத்தரவின் பேரில் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment