Sunday, October 26, 2014

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் சந்திப்பு!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையிலான சந்திப்பு, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26.10.14) இடம்பெற்றது.

இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை (25.10.14) விஜயம் செய்த கமலேஷ் சர்மா, இன்று ஞாயிற்றுக்கிழமை (26) வடக்குக்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முதற் சந்திப்பாக வடமாகாண ஆளுநரை சந்தித்த கமலேஷ் சர்மா, இன்று நண்பகல் யாழ். சிவில் சமூக பிரதிநிதிகளை கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியிலும் சந்திக்க உள்ளார். அத்துடன் கொடிகாமம் அல்லாரை பகுதியில் இடம்பெறும் வீட்டுத்திட்ட நடவடிக்கைகளையும் பார்வையிடவுள்ளார்.
சந்திப்பின் போது வட பகுதியில் யுத்தத்தின் பின் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெறுவதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து மதியம் 1.30க்கு ரில்கோ விருந்தினர் விடுதியில் சிவில் சமூகத்தினரை சந்திக்கவிருப்பதாகவும்,அதன் பின் இந்தியா வீட்டுத்திட்டத்தினையும் பார்வையிட இருப்பதாக தெரியவருகின்றது.
 
தொடர்ந்து வடக்கு முதல்வரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment