Sunday, October 26, 2014
புதுடெல்லி::புத்த துறவியின் சிறப்பு தபால் தலையை வெளியிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில், இந்தியா, இலங்கை இடையேயான உறவு பலமடையும் என தெரிவித்தார். இலங்கையை சேர்ந்த புத்தமத துறவி அனாகரிகா தர்மபாலா. புத்தமத கொள்கைகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரப்பியுள்ளார். இவரை கவுரவிக்கும் வகையில், சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அனாகரிகா தர்மபாலாவின் அஞ்சல்தலையை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டார். அஞ்சல் தலையை வெளியிட்டு பிரணாப் முகர்ஜி பேசுகையில், ‘‘அனாகரியா தர்மபாலாவின் அஞ்சல்தலை வெளியிடுவதன் மூலம் இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையேயுள்ள உறவு மேலும் வலுப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட இதுபோன்ற சமூக-கலாசார பரிமாற்றங்கள் ஊக்கமளிப்பவையாக உள்ளன. பல்வேறு பிரச்னைகளை தீர்ப்பதில் இரண்டு நாடுகளும் நீண்ட காலமாக இணைந்து செயல்பட்டு வருகின்றன’’ என்றார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment