Sunday, October 26, 2014
குன்னூர்::புலிகளின்
மீதான தடையை நீக்குவதா? அல்லது நீடிப்பதா? என்பது குறித்த சிறப்பு
நீதிமன்றம் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மன்ற அரங்கில் இன்று
தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் நீதிபதி மிட்டல் கலந்து
கொண்டு விசாரணை நடத்துகிறார். இன்று குன்னூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு
வருகை தந்த நீதிபதி மிட்டலுக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.
பின்னர்
நீதிமன்றம் தொடங்கியது. இதில் அரசு வக்கீல் ராஜேஸ் கண்ணன் கலந்து
கொண்டார். புலிகள் சார்பாக வைகோ பங்கேற்றார். போலீசார் சார்பில்
உளவுத்துறை எஸ்.பி. பவானி ஈஸ்வரி தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு
சந்திரசேகர், டி.எஸ்.பி. சேகர் உள்பட 35–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து
கொண்டனர். புலிகளுக்கு எதிரான தடையை நீக்க (புலி பினாமி) வைகோ
வலியுறுத்துகிறார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தை சுற்றி போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment