Sunday, October 26, 2014
சென்னை::தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்துக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அகமதாபாத் மற்றும் மும்பையில் இருந்து புறப்படுகிற ஏர்–இந்தியா விமானத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மும்பை, அகமதாபாத், கொச்சி விமான நிலையங்கள் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. மற்ற நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு 2–ம் கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையமும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். பதிவு செய்யப்பட்ட உடமைகள், கையில் கொண்டு செல்லும் உடமைகள் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. ஏர்–இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
குறிப்பாக சென்னையில் இருந்து இன்று காலை டெல்லி, மும்பை, கொச்சி, அகமதாபாத்துக்கு புறப்பட்டு சென்ற ஏர்–இந்தியா விமானப் பயணிகளை தீவிரமாக கண்காணித்த தோடு அவர்களின் அனைத்து உடமைகளும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.
மேலும் விமான நிலைய வளாகத்தில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் சுற்றித் திரிகிறார்களா எனவும் கண்காணித்து வருகிறார்.
உள்நாட்டு விமான நிலையம் மட்டுமின்றி பன்னாட்டு முனையத்திலும் நேற்றிரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment