Wednesday, October 29, 2014

சாட்சியங்களை திரட்டுவதற்காக விசேட படிவங்கள் எதனையும் தயாரிக்கவில்லை: ரொபர்ட் கொல்வில்லி!

Wednesday, October 29, 2014
இலங்கை::சாட்சியங்களை திரட்டுவதற்காக விசேட படிவங்கள் எதனையும் தயாரிக்கவில்லை ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தி வரும் குழுவினர் இதனை அறிவித்துள்ளனர்.
யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சாட்சியங்களை திரட்டும் நோக்கில் உத்தியோகபூர்வ ஆவணங்கள் எதனையும் தயாரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசேட ஆவணங்கள் எதுவும் கிடையாது எனவும், சில நிறுவனங்கள் இவ்வாறான ஆவணங்களை தங்களுக்கு ஏற்ற வகையில் தயாரித்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment