Wednesday, October 29, 2014
இலங்கை::இலங்கைத் தாய்க்குத் துரோகமிழைக்க வேண்டாம் என்று புலிகளின் முக்
கியஸ்தர் எழிலனின் மனைவி அனந்தியிடம் தேசிய சுதந்திர முன்னணி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை::இலங்கைத் தாய்க்குத் துரோகமிழைக்க வேண்டாம் என்று புலிகளின் முக்
கியஸ்தர் எழிலனின் மனைவி அனந்தியிடம் தேசிய சுதந்திர முன்னணி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக குறித்த விசாரணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் குறித்த விசாரணைக்குழுவையும் அதன் விசாரணைகளையும் இலங்கை ராஜதந்திர மட்டத்தில் நிராகரித்துள்ளது. மேலும் குறித்த விசாரணைக் குழுவுக்கு இலங்கை வருவதற்கும் அனுமதியளிப்பதில்லை என்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது
புலிகளின் முக்கியஸ்தர் எழிலனின் மனைவி. இறுதிப் போரின் பின்னர் அவரும் அவருடைய குழந்தைகளும் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த பின்னர் அவர்களைப் பாதுகாத்தது இராணுவத்தினர்தான்.
அவர்கள் புலிகளின் முக்கியஸ்தரின் மனைவி பிள்ளைகள் என்று தெரிந்த பின்னரும் அவர்களைப்பாதுகாத்தது இராணுவம்தான்.
அதன்பின்னர் வட மாகாண சபைக்குப்போட்டியிட்டு தெரிவான விடயத்திலும் அனந்திக்கு அரசாங்கமோ, இராணுவத்தினரோ தடையாக இருக்கவில்லை. அவ்வாறிருக்கு அனந்தி இராணுவத்தினருக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிராகவும் செயற்படுவது இலங்கைத் தாய்க்கு இழைக்கும் பெரும் துரோகமாகும்.
இந்தத் துரோகத்தைக் கைவிட்டு, இலங்கைத் தாயின் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் வாழ முன்வர வே்ண்டுமென்று அவரிடம் தேசிய சுதந்திர முன்னணி வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜயந்த சமரவீர தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment