Wednesday, October 29, 2014
இலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தேவையானதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செய்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தேவையானதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செய்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
(புலிகளுக்கு ஆதரவான) வெளிநாட்டவர்கள் வடக்கிற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கினை ஏன் வெளிநாடு ஒன்றாக அரசாங்கம் கருதுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் (புலிகளுக்கு ஆதரவான) வெளிநாட்டவர்கள் இரண்டு வீசா பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும், ஒன்று நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும் எனவும் மற்றையது வடக்கிற்குள் பிரவேசிப்பதற்கு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே பிரபாகரன் விரும்பியதாகவும் அதனையே அரசாங்கம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிற்கு பயணம் செய்வதற்கு தனியான அனுமதி எதற்கு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் அதற்கு அப்பாலான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் முனைப்பு காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment