Wednesday, October 29, 2014
இலங்கை::பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக 6 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சம்பவ இடத்தில் 2 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை::பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக 6 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சம்பவ இடத்தில் 2 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீரியபெத்தையில் 7, 8, 9, 10, 11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புக்களே மண்ணில் புதையுண்டுள்ளன.
7ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும் 8ஆம் இலக்க
லயனில் 16 வீடுகளும் 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும் 10ஆம் இலக்க லயனில்
10 வீடுகளும் 11ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் 12 ஆம் இலக்க லயனில் 6
வீடுகளும் இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பால் சேகரிக்கும் நிலையங்கள்
இரண்டு, வாகனங்கள் திருத்தும் இடம், இரண்டு கடைகள், மருத்துவமாது குடும்பம்
தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு, சிகிச்சை நிலையம் மற்றும் கோவில்
ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன.
இந்த மண்சரிவு இன்று (29) புதன்கிழமை காலை 7 மணிக்கும் 7.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும்
என்று முன்கூட்டியே அறிவுறுத்தல் விடப்பட்டமையால், பலர் பாதுகாப்பான
இடங்களுக்கு முன்கூட்டியே இடம்பெயர்ந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனால், மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாதுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அந்தக் குடியிருப்புக்களில்
வசித்த பாடசாலை மாணவர்கள் பலர் இன்று காலையிலேயே மீரியபெத்த பாடசாலைக்கு
சென்றுவிட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த பலர்
தங்களுடைய உடமைகளை எடுப்பதற்காக இன்று காலை அங்கு சென்றிருந்த போதே இந்த
அனர்த்தத்தில் சிக்கிகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை தேடும்
பணியில் முப்படையினரும் இலங்கை விமானப்படையின் விசேட ஹெலிகொப்டர்களும்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.
அத்துடன், பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட
பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதியர், மருத்துவ குழு மற்றும்
நோய்காவு வண்டிகளும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment