சென்னை::அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அம்மா என்று சொல்வது போக ஏகப்பட்ட புதுப் புதுப் பெயர்களில் அவரை மரியாதையுடன் விளிக்க ஆரம்பித்துள்ளனர் அதிமுகவினர்.
அவர் ஜெயிலுக்குப் போன பின்னர் இந்த பெயர் சூட்டல் அதிகமாகி விட்டது.
சிறையில் அவர் இருந்தபோது விதம் விதமான பெயர்களில் அவரை அழைத்து போஸ்டர் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் அதிமுகவினர்.
இப்போது புதுப் பெயர் ஒன்றை சூட்டியுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த அதிமுகவினர் வைத்திருந்த ஒரு பேனரில் ஜெயலலிதாவை இந்தியாவின் 'அம்மாஜி'யே என்று விளித்திருந்தனர்.
ஜி' என்ற வார்த்தையை சேர்த்து விட்டால் 'நேஷனல் பிளேவர்' கிடைக்கும் என்று யாராவது சொல்லியிருப்பார்கள் போல. அதனால்தான் அம்மாவுடன் 'ஜி'யை சேர்த்து விட்டனர்....!
No comments:
Post a Comment