Friday, October 24, 2014

பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்ரமணிய சாமியை இன்று தமிழக மீனவர்கள் சந்தித்து பேசினர்!


Friday, October 24, 2014
சென்னை,::பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்ரமணிய சாமியை இன்று தமிழக மீனவர்கள் சந்தித்து பேசினர். அப்போது இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கள் படகுகளை மீட்டுத்தர வேண்டும் என்று மீனவர்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

சந்திப்பு முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சாமி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து தான் இது குறித்து பேசுவதாகவும், படகுகளை விடுவிக்க வலியுறுத்தப்போவதாகவும் கூறினார்.
 
மீனவர்கள் சாமியை சந்தித்தபோது அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா, மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், சந்திரலேகா ஐ.ஏ.எஸ். ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment