Friday, October 24, 2014
டமாஸ்கஸ்::ஈராக் மற்றும் சிரியாவில் `ஐ.எஸ்.ஐ.எஸ்.' அமைப்பு தீவிரவாதிகளின் கை
ஓங்கியுள்ளது. அவர்கள் தனிநாடு அமைத்து புதிய சட்டதிட்டங்களை
உருவாக்கியுள்ளனர். தங்களிடம் சிக்கும் பிணை கைதிகளை தலை துண்டித்து கொலை
செய்கின்றனர்.
அவர்களை ஒடுக்க அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் குண்டு வீச்சு நடத்தி
வருகின்றனர். இருந்தும் அவர்களை அழிக்க முடியவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் யூ டியூப் இணைய தளத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கின்றனர். அதில், (புலிகளின் பாணியில்) எதிரிகளை தலை துண்டித்து கொலை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பிணைக் கைதிகளை துன்புறுத்துவது, ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவது எப்படி? என்பன போன்றவை குறித்தும் அதிதீவிர பயிற்சி கொடுக்கப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தீவிரவாதிகள் இப்பாடத்தை கட்டாயமாக புகுத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பெற்றோரிடம் அவர்களின் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர். இதனால் விருப்பமின்றி அப்பயிற்சிக்கு பெற்றோர் குழந்தைகளை அனுமதிப்பதாக தெரிகிறது.
இந்த வீடியோ காட்சிகள் சிரியாவில் தீவிரவாதிகள் பலம் வாய்ந்த ரப்பா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் தங்களின் கருப்பு நிற கொடியை அசைத்தபடி ரோந்து வரும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

No comments:
Post a Comment