Tuesday, October 28, 2014
இலங்கை::வட மாகாண சபையை “புதிய பிரேரணை சபை” என பெயர் மாற்ற வேண்டும் என வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து இதுவரை வட மாகாண சபை 17 தடவை கூடியுள்ளது. முதலாவது அமர்வு சம்பிரதாயபூர்வமானது ஏனைய சில அமர்வுகளின் போது சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இறுதியாக இடம்பெற்ற அமர்வில் காணி தொடர்பிலான பிரச்சினை கலந்துரையாடப்பட்டது. அதனைத்தவிர 14 தடவைகள் கூடியுள்ளது. அதன் போது 150ற்கும் அதிகமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை அனைத்தும் என்னிடம் உள்ளன. அதில் என்ன விடயங்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏதாவது ஒன்றைக் கூறுவார்கள். இல்லாவிடின் வேறு எவருக்காவது கூறுவர். இவை மாகாண சபையுடன் தொடர்புபட்ட விடயங்கள் அல்ல. எனவே இந்தப் பிரேரணைகள் அர்த்தமற்றவை. ஆகவே வட மாகாண சபையின் பெயரை புதிய பிரேரணை சபை எனப் பெயர் மாற்ற வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment