Tuesday, October 28, 2014
இலங்கை::புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் ஜனாதிபதி தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு எதிரான தடை நீக்கத்தின் ஊடாக,
புலி
ஆதரவாளர்களின் நிதி திரட்டல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம்
நியாயப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
வெற்றியீட்டியதாகவும், 2006ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளுக்கு
எதிரான தடையை அறிவித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தடை நீக்கம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையே மோசமாக பாதிக்கும் என அவர் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் புலிகள் மீள ஒருங்கிணையவும் நிதி
திரட்டல்களில் ஈடுபடவும் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அவர்
தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் இலங்கையர்களை மோசமாக பாதிக்கும் எனவும்
அனைத்து இலங்கையர்களும் இந்த தடை நீக்கத்திற்கு எதிராக அணி திரண்டு குரல்
கொடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment